சந்திரமுகி 2 திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
பி வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் கூட்டணியில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகியுள்ளது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் எம் எம் கீரவாணி இதற்கு இசையமைத்துள்ளார். இதில் மகிமா நம்பியார், லட்சுமிமேனன், ராதிகா சரத்குமார், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வேட்டையன் மற்றும் சந்திரமுகி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், அதை தொடர்ந்து ட்ரைலரும் வெளியானது. ட்ரெய்லர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி செப்டம்பர் 28க்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இறைவன், ரத்தம், சித்தா, பார்க்கிங் உள்ளிட்ட திரைப்படங்கள் செப்டம்பர் 28 இல் வெளியாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.