சந்திரமுகி 2 படத்தின் கங்கணா ரனாவத் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் இன்றைய வரையிலும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. இதில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இதற்கு சந்திரமுகி 2 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் பாகத்தை இயக்கிய பி வாசு தான் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு எம் எம் கீரவாணி இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் மும்பை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்டமான அரண்மனையில் படமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது.
தற்போது சந்திரமுகியாக நடித்துள்ள கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
இந்த போஸ்டரை பார்க்கும்போது சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா எந்த அளவிற்கு சந்திரமுகியின் கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்தினாரோ அதுபோல கங்கனா ரனாவத்தும் சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகி என்ற பேரழகியின்
கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் விதமாக நடித்திருப்பார் என்று தெரியவந்துள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.