Homeசெய்திகள்சினிமாராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் கூட்டணியில் 'சந்திரமுகி 2' ....ரிலீஸ் குறித்த அப்டேட்!

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் கூட்டணியில் ‘சந்திரமுகி 2’ ….ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா பிரபு ,வடிவேலு, நாசர், மாளவிகா, வினித், கே ஆர் விஜயா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு, தற்போது 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி. வாசு இயக்குகிறார்.இப்படத்தில் ராகவா லாரன்ஸ், ராதிகா, கங்கனா ரணாவத், லட்சுமிமேனன், வடிவேலு, மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படம் மும்பை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்டமான அரண்மனையில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்த படம் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ளது. பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் படத்திற்கு இசையமைத்த எம் எம் கீரவாணியின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்டி ராஜசேகர் இதற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2‘ திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தற்போதைய தகவல் தெரிவிக்கிறது. எனினும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ