சந்திரமுகி 2 படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் சந்திரமுகி 2. கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் தயாராகியுள்ளது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் எம் எம் கீரவாணியின் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. இதில் வேட்டையனாக ராகவா லாரன்ஸும் ஒரிஜினல் சந்திரமுகியாக கங்கணா ரணாவத்தும் நடித்துள்ளனர். வடிவேலு இதில் முதல் பாகத்தில் நடித்த அதே முருகேசனாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
Take a peep into the House of Chandramukhi. 👀🗡️🔥 Here is a new thrilling Special Exhibition of #Chandramukhi2 🗝️
Telugu release by @SriLakshmiMovie
🎬 #PVasu
🌟 @offl_Lawrence @KanganaTeam
🎶 @mmkeeravaani
🎥 @RDRajasekar
🛠️ #ThottaTharani
✂️🎞️…— Lyca Productions (@LycaProductions) September 23, 2023

அதனால் படக்குழுவினர் தற்போது சந்திரமுகி 2 படத்தின் புதிய ட்ரெய்லரை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளனர். இந்த ட்ரெய்லரில் வேட்டையின் ராஜாவும் சந்திரமுகியும் மோதும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.