- Advertisement -
தனுஷ் நடித்து இயக்கி உள்ள ராயன் படத்திலிருந்து அபர்ணா பாலமுரளியின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது.
நடிப்பு, இயக்கம், பாடல் ஆசிரியர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்ட நட்சத்திரம் தனுஷ். தொடக்கத்தில் தோல்வி மற்றும் விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வந்த தனுஷ், இன்று சினிமா எனும் கோட்டையில் வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ளார். கோலிவுட்டில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற தனுஷ், தன் கவனத்தை இயக்கம் பக்கம் திருப்பினார். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு பா பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
