Homeசெய்திகள்சினிமாகாசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்டம்பர் 10-ல் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி...

காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்டம்பர் 10-ல் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி சம்மன்!

-

- Advertisement -

பிரபல நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர். சரத்குமாருக்கு எதிராகத் தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில், அவர் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்டம்பர் 10-ல் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி சம்மன்!ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் நடிகர் சரத்குமார் தனிப்பட்ட முறையில் ரூபாய் 2 கோடி கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக சரத்குமார் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட காசோலை (Cheque), சம்பந்தப்பட்ட வங்கியில் பணம் இல்லாத காரணத்தினால் திரும்பி வந்துள்ளது (Bounce). இதனைத் தொடர்ந்து, பணத்தை ஏமாற்றும் நோக்கில் மோசடி செய்ததாகக் கூறி ஸ்ரீகிருஷ்ணா தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடரப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவு
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், புகாரை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி, இவ்வ வழக்கில் நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சம்மன் பிறப்பித்துள்ளார். அதன்படி, வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடிக்கிருத்திகை விழா: திருத்தணி முருகன் கோவிலில் காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகை ரோஜா!

we-r-hiring

MUST READ