சிரஞ்சீவி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் போலா சங்கர். இந்த படத்தை தொடர்ந்து சிரஞ்சீவி தனது 157 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வசிஷ்டா என்பவர் எழுதி, இயக்குகிறார். இது சம்பந்தமான அறிவிப்பு சமீபத்தில் சிரஞ்சீவியின் பிறந்த நாளில் வெளியானது.
பஞ்சபூதங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் பேண்டஸி கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது இந்நிலையில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகை அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீவியுடன் அனுஷ்கா இணைந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.