Homeசெய்திகள்சினிமாசித்தப்பா - மகள் உறவை பேசும் 'சித்தா'.... டீசர் வெளியானது!

சித்தப்பா – மகள் உறவை பேசும் ‘சித்தா’…. டீசர் வெளியானது!

-

சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள சித்தா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சித்தா திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். எட்டாகி என்றைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவிலும் திபு நினன் தாமஸ் இசையமைப்பிலும் இப்படம் உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது அதைத் தொடர்ந்து சமீபத்தில் கண்கள் ஏதோ எனும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரின் மூலம் சித்தப்பா மற்றும் மகளின் உறவை பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சித்தார்த் இந்த படத்தில் புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார்.
தற்போது இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ