கடந்த 1985-ம் ஆண்டு வெளியான கே பாலச்சந்தர் இயக்கிய சிந்து பைரவி படத்தில் வந்த நான் ஒரு சிந்து என்ற பாடல் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் பாடகி கே.எஸ்.சித்ரா. சுமார் 38 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் சித்ரா தமிழில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடல்களை பாடி இருக்கிறார். அதேபோல, தமிழ் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஒடியா, பெங்காளி, பஞ்சாபி, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது சான்ஸ்கிரிட் மற்றும் படுகா என அனைத்து மொழிகளிலும் அவர் பாடல்கள் பாடி உள்ளார். இது தவிர, மலாய், லத்தீன், அரபிக், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளிலும் அவர் பாடல்கள் பாடி இருக்கிறார்.
இதுவரை 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலக புகழ்பெற்றவர் பாடகி சித்ரா. அதேபோல கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் இதுவரை 6 தேசிய விருதுகள் வென்று உள்ளார். உலக அளவில் புகழ்பெற்ற சித்ரா வாழ்வில் 2011-ல் ஒரு சோகம் நிகழ்ந்தது. துபாய் சென்றிருந்தபோது, அவரது மகள் நந்தனா தவறுதலாக நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்துபோனார். இந்நிலையில் அவர் இறந்து சுமார் 12 ஆண்டுகள் கடந்த நிலையில், பாடகி சித்ரா தனது மகள் நந்தனாவின் பிறந்தநாளை நினைவு கூர்ந்து, கனத்த இதயத்துடன் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், நந்தனா எங்கள் இதயத்தில் நீ ஒரு மிகப்பெரிய வடுவை ஏற்படுத்தி சென்று விட்டாய், ஒவ்வொரு நாளும் உன்னை நான் மிஸ் செய்கிறேன். ஹாப்பி பர்த்டே நந்தனா என்று குறிப்பிட்டுள்ளார்