விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வௌியாக உள்ளது. பா ரஞ்சித் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இதைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் வீர தீர சூரன் 2. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா ஆகிய படங்களை இயக்கி பிரபலம் அடைந்த அருண்குமார் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ், சித்திக் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் தலைப்புடன் சேர்ந்து டைட்டில் டீசரும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும், முதலில் வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டு பின்னர் முதல் பாகத்தை வௌியிடுகின்றனர். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்றது.
#ChiyaanVikram has gone to Madurai for the 2nd Schedule shoot of #VeeraDheeraSooran#Thangalaan #Chiyaan63pic.twitter.com/e1WKesAA1B
— Movie Tamil (@MovieTamil4) June 24, 2024