கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹைமர் படத்தில் இருந்து புதிய மிரட்டல் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
உலகளவில் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தற்போது இரண்டாம் உலகப் போரின் அணுகுண்டு சோதனையை மையமாக வைத்து ஓப்பன்ஹைமர் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் அணுகுண்டு சோதனை விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

நோலனே இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். அவரின் மனைவி எம்மா தாம்சன் மற்றும் அட்லஸ் என்டர்டெயின்மென்ட்டின் சார்லஸ் ரோவனுடன் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட் ரைசஸ், இன்செப்ஷன் மற்றும் டன்கிர்க் உள்ளிட்ட படங்களை அடுத்து இந்தப் படத்தில் சிலியன், நோலன் கூட்டணி இணைந்து பணியாற்றியுள்ளனர்.
ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து வெளியான ட்ரைலர் சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. தற்போது மற்றுமொரு அணுகுண்டு ட்ரைலர் போட்டு ரசிகர்களை கிறங்கச் செய்துள்ளார் நோலன். அவரின் மற்ற படங்களைப் போலவே இந்தப் படமும் சூப்பர் ஹிட் என்பது ட்ரைலரைப் பார்க்கும் போதே தெரிகிறது.
அணுகுண்டுனா என்னனு பாக்க ரெடி ஆகுங்க ஹாய்ஸ்!
ஓப்பன்ஹைமர் படம் ஜூலை 21, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.