spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

-

- Advertisement -

பிரபல நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

பிளாக் ஷீப் என்ற யூடியூப் சேனல் நடத்திய நகைச்சுவை தொடரில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் பிஜிலி ரமேஷ். இவர் தமிழில் நட்பே துணை, ஜாம்பி, பொன்மகள் வந்தாள், ஆடை உள்ளிட்ட பல்வேறு நடித்து பிரபலமடைந்தார். இந்த நிலையில், பிஜிலி ரமேஷ் அண்மை காலமாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார்.

we-r-hiring

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பிஜிலி ரமேஷ் உயிரிழந்தார். இதனை அடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாக பிஜிலி ரமேஷின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ