Homeசெய்திகள்சினிமாமண்ணைக் கவ்விய 5 படங்கள்... மீண்டு வருவாரா பூஜா ஹெக்டே!

மண்ணைக் கவ்விய 5 படங்கள்… மீண்டு வருவாரா பூஜா ஹெக்டே!

-

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தனது சினிமா கேரியரில் சவாலான கட்டத்தை கடந்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன.

பூஜா ஹெக்டே, பிரபாஸ் உடன் நடித்த ராதே ஷ்யாம் திரைப்படம் தோல்வி அடைந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் மக்களைக் கவரத் தவறியது.

அதையடுத்து தமிழில் விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். படத்தின் ரிசல்ட் எல்லாருக்கும் தெரியும்.

பின்னர் பாலிவுட்டில் ரன்வீர் சிங் உடன் சர்க்கஸ் படத்தில் நடித்தார். அந்தப் படமும் மண்ணைக் கவ்வியது. அதையடுத்து சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் இணைந்து நடித்த ஆச்சர்யா படத்திலும் பூஜா நடித்தார். இந்தப் படமும் படுதோல்வி.

தற்போது சல்மான் பாய் உடன் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் நடித்தார். ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக் தான் இந்தப் படம். கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து படத்தை மெருகேற்றினர். ஆனால் இந்த பர்னிச்சரும் உடைபட்டது.

இப்படியாக கடைசியாக நடித்த 5 படங்களும் பூஜாவுக்கு பெரும் வேதனையாக அமைந்துவிட்டது.

பூஜா ஹெக்டே இப்போது மகேஷ் பாபுவுடன் இணைந்து, திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் மீது தனது அனைத்து நம்பிக்கைகளையும் வைத்துள்ளார்.

பார்ப்போம் இந்தப் படமாவது அவருக்கு கைகொடுக்குமா என்று!

 

MUST READ