Homeசெய்திகள்சினிமா"கடைசியாக தூதுவளை இலை ரசம் கேட்டு விரும்பி சாப்பிட்டார்" - பாடகி ஜானகியின் மறைவு குறித்து...

“கடைசியாக தூதுவளை இலை ரசம் கேட்டு விரும்பி சாப்பிட்டார்” – பாடகி ஜானகியின் மறைவு குறித்து சமையல் உதவியாளர் வேலு கண்ணீர் பேட்டி!

-

- Advertisement -

மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள், இறப்பதற்கு முந்தைய நாள் தனக்கு மிகவும் பிடித்த தூதுவளை இலை ரசம் கேட்டு விரும்பிச் சாப்பிட்டதாக அவரது சமையல் உதவியாளர் வேலு கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
வேலு

மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலி
​பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, ஒட்டுமொத்த இந்திய இசை ரசிகர்களின் மனங்களை வென்ற ‘இசைக்குயில்’ எஸ்.ஜானகி நேற்று மாலை கர்நாடக மாநிலம் மைசூரில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மைசூரில் அவர் வசித்து வந்த பொகாதி பகுதியில் உள்ள இல்லத்தில் முதலில் வைக்கப்பட்டது. அதன் பின்னர், லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்திற்குக் கொண்டு வரப்பட்டு, தற்போது இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

we-r-hiring

சமையல் உதவியாளரின் உருக்கமான பேட்டி
​கடந்த 7 ஆண்டுகளாக பாடகி ஜானகி அம்மாவிடம் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வரும் வேலு, ஜானகியின் உடலுக்குத் தனது இறுதி மரியாதையைச் செலுத்திய பின் செய்தியாளர்களிடம் உருக்கமாகப் பேசினார். அவர் கூறுகையில்:

“நான் அம்மாவிடம் கடந்த 7 வருடங்களாக சமையல் உதவியாளராக வேலை செய்து வந்தேன். நான் சமைக்கும் உணவை அவர் எப்போதும் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார். குறிப்பாக வெங்காயம், பூண்டு சேர்க்காமல் நான் செய்து கொடுக்கும் உணவுகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதன் பிறகு, தனக்கு உதவியாக ஒரு பெண் வேண்டும் என்று கூறி ஒரு பெண் உதவியாளரையும் உடன் வைத்துக் கொண்டார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நான் அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது என்னிடம், ‘எனக்குத் தூதுவளை இலை ரசம் வச்சுத் தர்றியாப்பா?’ என்று ஆசையாகக் கேட்டார். உடனே நானும் அவருக்குத் தூதுவளை இலை ரசம் தயார் செய்து கொடுத்தேன். அதை அவர் மிகவும் ருசித்து, மகிழ்வோடு சாப்பிட்டார். அந்த நினைவுகள் என் நெஞ்சை விட்டு மறைவதற்குள்ளாகவே, அம்மா எங்களை எல்லாம் தவிக்கவிட்டுப் பிரிந்துவிட்டார்” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

​தூதுவளை ரசம் கேட்டு ஜானகி அம்மா விரும்பிச் சாப்பிட்ட அந்த இறுதித் தருணத்தை வேலு பகிர்ந்து கொண்ட விதம், அங்கிருந்த ரசிகர்களையும், கலை உலகினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

MUST READ