மீண்டும் சினிமா பக்கம் திரும்பிய தோனி… கன்னட படத்தை தயாரிக்க முடிவு…
- Advertisement -
கிரிக்கெட்டிலிருந்து சினிமாவில் தடம் பதித்து, முதன் முதலாக தமிழில் படம் தயாரித்த எம்.எஸ்.தோனி, அடுத்ததாக கன்னட படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார்.

கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வரும் மகேந்திர சிங் தோனி, அண்மையில் திரைப்பட தயாரிப்பிலும் இறங்கினார். தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் மகேந்திர சிங் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி இருவரும் இணைந்து தமிழில் முதல் படத்தை தயாரித்தனர். இப்படத்திற்க்கு எல்.ஜி.எம். என்று தலைப்பு வைக்கப்பட்டது. படத்தில், ஹரிஸ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யோகிபாபு, நதியா, சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு தோனி தயாரிக்கும் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்தது. ஆனால், படத்தயாரிப்பு பணியை தோனி தள்ளி வைத்திருந்தார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியதை தொடர்ந்து அவர் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தி வந்தார். தற்போது அவர் ஐபிஎஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் தோனி தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கன்னட படம் ஒன்றை அவர் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. இது தோனி இயக்கும் இரண்டாவது படமாகும். படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது