spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாயுவராஜ்சிங் பயோபிக்கில் நடிக்கும் ரன்பீர் கபூர்

யுவராஜ்சிங் பயோபிக்கில் நடிக்கும் ரன்பீர் கபூர்

-

- Advertisement -
பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

we-r-hiring

 

பாலிவுட் எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தில் இன்று வரை இளம் நடிகராக இருப்பவர் நடிகர் ரன்பீர் கபூர். அவருக்கென தனி ரசிகைகள் பட்டாளம் உள்ளது எனவே கூறலாம். இந்தி திரை உலகில் முன்னணி நடிகராகவும், பான் இந்தியா நடிகராகவும் அவர் உருவெடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு அவர் ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு அந்த நட்சத்திர தம்பதிக்கு பெண குழந்தை பிறந்தது. தற்போது இருவரும் அடுத்தடுத்து பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

ரன்பீர் கபூர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அனிமல். சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இருப்பினும் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களும் பல எழுந்தன.

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனது பயோபிக்கில் ரன்பீர் கபூர் நடித்தால் நன்றாக இருக்கும் என யுவராஜ் சிங்கே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது

MUST READ