Homeசெய்திகள்சினிமாதனுஷ் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்

தனுஷ் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்

-

- Advertisement -
ஒல்லி உடல், குறுந்தாடி, வழித்து சீவிய முடி இப்படி கடும் விமர்சனங்களை சந்தித்து, அதை கடந்து வந்து இன்று இந்திய திரையுலகின் அடையாளத்தில் ஒருவரமாக உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ். ஆரம்ப காலத்தில் அவர் நடித்த படங்கள் மட்டுமன்றி அவரும் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகினர். தொடர்ந்து ஆக்‌ஷன் நாயகனாகவும், அதிரடி நாயகனாவும் உயர்ந்த தனுஷ் இன்று கோலிவுட்டின் முன்னணி கதாநாயகன். தமிழ் மட்டுமில்லை, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அவருக்கு பட்டி தொட்டி எங்கும் ரசிகர் கூட்டம் உள்ளது.

பாலிவுட்டில் அவர் நடித்த ராஞ்சனா திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து அங்கு படங்கள் நடித்து வருகிறார். அதேபோல, ஹாலிவுட்டிலும் இரண்டு படங்களில் அவர் நடித்திருக்கிறார். தனுஷ் நடிப்பில் இறுதியாக கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கி உள்ளது. தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ