தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தனுஷ் D51 படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் மிகுந்த பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். மேலும் சமீபத்தில் நாகார்ஜுனா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கூடுதல் தகவலாக, இந்த படம் அரசியல் மற்றும் மாபியா சம்பந்தமான கதைக்களத்தில் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. மேலும் இந்த படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


