- Advertisement -
தமிழ் திரையுலகம் மட்டுமன்றி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு கட்டி பிசியாக நடித்து வருபவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் தொடங்கிய தனுஷின் திரைப்பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த தனுஷ் தற்போது தமிழ் திரையை தாண்டி பிற மொழிப்படங்களிலும் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்தியில் ராஞ்சனா என்ற படத்தில் நடித்தார். இத்திரைப்படம் இந்தியில் மட்டுமில்லாமல், தமிழிலும் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் இந்தியில், ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ஹிட் அடித்தது. தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் இணைந்து மூன்றாவது படத்தில் நடித்து வருகிறார்.

இறுதியாக அவரது நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் தனுஷ் தற்போது, தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் 51-வது படத்தில் நடித்து வருகிறார்.




