Homeசெய்திகள்சினிமாபூஜையுடன் தொடங்கிய 'டிடி ரிட்டன்ஸ் 2' ஷூட்டிங்!

பூஜையுடன் தொடங்கிய ‘டிடி ரிட்டன்ஸ் 2’ ஷூட்டிங்!

-

- Advertisement -

நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கி பின்னர் ஹீரோவாக உருவெடுத்தவர். அந்த வகையில் இவருடைய படங்கள் பெரும்பாலும் காமெடி கலந்த கதை களத்தில் ரசிகர்களை வெகுவாக கவரும். பூஜையுடன் தொடங்கிய 'டிடி ரிட்டன்ஸ் 2' ஷூட்டிங்!இவர் ஏற்கனவே தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ஆகிய காமெடி – ஹாரர் படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களில் நடிகர் சந்தானம் பேயை கூட கலாய்த்து விடுவார். அதன்படி இந்த படங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகமாக டிடி ரிட்டன்ஸ் 2 எனும் திரைப்படம் வெளியானது.பூஜையுடன் தொடங்கிய 'டிடி ரிட்டன்ஸ் 2' ஷூட்டிங்! இந்த படமும் காமெடி கலந்த ஹாரர் படமாக வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியிருந்த நிலையில் டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க பட குழுவினர் திட்டமிட்டனர். பூஜையுடன் தொடங்கிய 'டிடி ரிட்டன்ஸ் 2' ஷூட்டிங்!இதனை நடிகர் ஆர்யா தயாரிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்றும் நடிகர் ஆர்யா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுவார் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது. பூஜையுடன் தொடங்கிய 'டிடி ரிட்டன்ஸ் 2' ஷூட்டிங்!இந்நிலையில் டிடி ரிட்டன்ஸ் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

MUST READ