- Advertisement -
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் டியர் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி மற்றும் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ள ஜி.வி. தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். ஆண்டுக்கு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மட்டும் குறைந்தபட்சம் 3 திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ரிபெல், கள்வன், உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளன. அதே சமயம், ஜிவி நடித்துள்ள மற்றொரு திரைப்படம் தான் டியர்.
