லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க இருக்கிறார்.
விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சினேகா, லைலா, மைக் மோகன், விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், பூஜை வீடியோ வெளியானது. இந்த காணொலி வாயிலாகவே, படக்குழுவினரையும் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று முடிந்தது. அண்மையில் படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி, அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், விஜய் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி டிசம்பர் மாதத்தோடு 31 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தளபதி68 படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வௌியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.