spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராஷ்மிகாவை மீண்டும் வட்டமடிக்கத் தொடங்கிய டீப் ஃபேக் சர்ச்சை

ராஷ்மிகாவை மீண்டும் வட்டமடிக்கத் தொடங்கிய டீப் ஃபேக் சர்ச்சை

-

- Advertisement -
தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பாகவே, அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் அவர் பிரபலம் என்றே சொல்லலாம். சுல்தான்படத்திற்கு பிறகு, விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமன்றி இந்தியில் அனிமல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ராஷ்மிகா, பாலிவுட்டிலும் உச்ச நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

தற்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அத்துடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் ரெயின்போ படத்தில் நடித்து வருகிறார். மேலும், ராகுல் ரவீந்திரன் இயக்கும் தி கேர்ள்பிரண்ட் படத்திலும் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகிறது.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து டீப் பேக் வீடியோ வெளியிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதையடுத்து, டெல்லி போலீசார் இது தொடர்பாக விசாரித்து வீடியோ வெளியிட்ட நபரை கைதும் செய்தனர். இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய சர்ச்சை தலைதூக்கியுள்ளது. அதன்படி மீண்டும் ராஷ்மிகா மந்தனாவை வைத்து டீப் ஃபேக் செயலி மூலம் ஆபாசமாக புகைப்படத்தை சித்தரித்து இணையத்தில் வௌியிட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று ராஷ்மிகாவின் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

MUST READ