spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகல்கி 2898 AD புரமோசன் நிகழ்ச்சி... கர்ப்பிணி தீபிகாவுக்கு உதவிய பிரபாஸ்...

கல்கி 2898 AD புரமோசன் நிகழ்ச்சி… கர்ப்பிணி தீபிகாவுக்கு உதவிய பிரபாஸ்…

-

- Advertisement -
சலார் திரைப்படத்தை அடுத்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே. அதாவது கல்கி 2898 AD.இப்படம் இந்திய திரை உலகில் மாபெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடித்திருக்கிறார். மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில் பைரவா என்ற கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து படத்திலிருந்து முதல் பாடலான பைரவா ஆந்தமும் வௌியானது.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற கல்கி திரைப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில், மேடையிலிருந்து கீழே இறங்கிய தீபிகாவுக்கு உதவி செய்ய அமிதாப் பச்சனும், பிரபாஸூம் முண்டியடித்துச் சென்றனர். தொடர்ந்து நடிகர் பிரபாஸ் தீபிகாவின் கையைப் பிடித்து கீழே இறக்கிவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ