spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் பாபி சிம்ஹா மீது நண்பர் மான நஷ்ட வழக்கு

நடிகர் பாபி சிம்ஹா மீது நண்பர் மான நஷ்ட வழக்கு

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் நடிப்பில் முதிர்ச்சி பெற்ற நடிகர்களில் ஒருவர் பாபி சிம்ஹா. குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் இளம் வயதிலேயே முதியவர் வேடங்களிலும் நடித்து நடிப்பு முதிர்ச்சியை காட்டியிருக்கிறார். 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா மற்றும் காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் பாபி சிம்ஹா. அதைத் தொடர்ந்து சூது கவ்வும், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர். ஜிகர்தண்டா படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாபி சிம்ஹாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. நடிகராக மட்டுமன்றி வில்லன் வேடங்களிலும் பல படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் கோ 2 படம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அதன் பிறகு தற்போது ராகேஷ் NS இயக்கத்தில் தடை உடை எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

we-r-hiring

 

இதனிடையே கொடைக்கானலில் அனுமதியின்றி பங்களா கட்டியது தொடர்பாக நடிகர் பாபி சிம்ஹா மீது ஏற்கனவே பல வழக்குகள் போடப்பட்டன. தற்போது பாபி சிம்ஹாவின் நண்பர் ஒருவரும் கூட மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். ஆலந்தூரைச் சேர்ந்த உசேன் என்ற அவர் தொடுத்த வழக்கில், நானும் பாபி சிம்ஹாவும் நண்பர்கள். என் சகோதரர் மூலம் அறிமுகமான கட்டுமான தொழிலதிபரின் உதவியுடன் பாபி கொடைக்கானலில் வீடு கட்டினார். ஆனால், 90 சதவிகித பணிகள் முடிந்தும் பணம் கொடுக்கவில்லை என்றும், இந்த பிரச்சனைக்கு சமாதானம் கூறப்போன என்னையும், என் அப்பாவையும் மிரட்டி அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அவர் எனக்கு மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து வழக்கு பதிந்துள்ளார்.

MUST READ