- Advertisement -
மணிகண்டன் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான லவ்வர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.
சின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு வந்த மணிகண்டனுக்கு எடுத்ததும் பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. காலா படத்திற்கு பிறகுதான் மணிகண்டனின் திரைவாழ்வு ஏறுமுகமாக அமைந்தது. ராஜாகண்ணுவாக அவர் நடித்த ஜெய் பீம் திரைப்படம் மணிகண்டனை கோலிவுட்டின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றியது. இப்படத்தைத் தொடர்ந்து அவர் குட் நைட் திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
#Lover | Deleted Scene.
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 18, 2024
