செப்டம்பரில் வெளியாகும் தேவரா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…
- Advertisement -
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி இருக்கும் தேவரா திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

டோலிவுட் திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்டிஆர். இவர் 90-களில் முதல் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அண்மைக் காலமாகத் தான் அவரது படங்கள் ஹிட் அடிக்கின்றன. அதே சமயம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெறுகின்றன. அந்த வகையில் அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் ஆர்.ஆர்.ஆர். டோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இப்படத்தை இயக்கினார். இவருடன் ராம்சரண், அலியா பட், ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது நடித்து வரும் திரைப்படம் தான் தேவரா. இப்படத்தை கொரட்டல சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். அத்துடன் பிரபல பாலிவுட் நடிகர் சாயிஃப் அலிகான் இதில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகி வருகிறது. முதலில் இத்திரைப்படம் அக்டோபர் மாதம் வௌியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.