கடந்த 2014 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக், சுரபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். வேல்ராஜ் இந்த படத்தை எழுதி,இயக்கி, ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தனுஷின் 25வது படமான இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இன்ஜினியரிங் முடித்து வேலையில்லாமல் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ரகுவரன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார். அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது.
தற்போது வேலையில்லா பட்டதாரியின் தெலுங்கு ரீமேக் வெர்சன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரகுவரன் பி டெக் என்று தலைப்பிடப்பட்ட இந்த தெலுங்கு ரீமேக் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.