Homeசெய்திகள்சினிமாதனுஷை விட ஐஸ்வர்யா மோசம்... சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா...

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்… சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா…

-

- Advertisement -
தமிழ் சினிமாவை தாண்டி இன்று உலக சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் தனுஷ். சினிமாவில் அறிமுகமான ஆரம்ப நாட்களில் அவரது தோற்றத்திற்கும், முகத்திற்கும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அந்த தனுஷ் தான் இன்று கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கிறார். தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டவர் நடிகர் தனுஷ்

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, யாத்ரா, மற்றும் லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பாக ஐஸ்வர்யாவும், தனுஷூம் பிரிவதாக அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் திருமண வாழ்க்கை குறித்து பாடகி சுசித்ராவிடம் தனியார் நிகழ்ச்சியின் போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதன்படி, நடிகர் தனுஷை விட ஐஸ்வர்யா தான் மிகவும் மோசம். இருவரும் தம்பதிகளாக ஒன்றாக இருந்தபோதே, மற்றவர்கள் மீது ஈர்ப்பு இருந்தது. இருவரும் தனித்தனியாக மற்றவர்களுடன் இணைந்து டேட்டிங் செல்வது வழக்கமாக வைத்திருந்தனர். தனுஷ் தன்னை ஏமாற்றியதாக ஐஸ்வர்யா கூறியிருந்தார். ஆனால், ஐஸ்வர்யாவும் தனுஷை ஏமாற்றியிருக்கிறார் என்பது தான் உண்மை. ஆனால், தனுஷ் நல்ல தந்தையாக உள்ளார் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஆனால், ஐஸ்வர்யா அப்படி இல்லை. இருப்பினும், அவர்களின் குழந்தைகள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் வளர்வதை விட, அவர்களின் தாத்தாவிடம் வளர்வதே சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்திலிருந்து ஏராளமான சர்ச்சை புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் பேட்டி அளித்திருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ