தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். மேலும் தனது 51வது படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் பிறகு Tere Ishk Mein என்ற பாலிவுட் படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி உள்ளார்.
இதற்கிடையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இவ்வாறு பல படங்களை கைவசம் வைத்துள்ள தற்போது மீண்டும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உடன் புதிய படத்தில் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.
Looking forward ♥️@ArunMatheswaran @wunderbarfilms https://t.co/wNowlrwJ4p
— Dhanush (@dhanushkraja) August 20, 2023
ஏற்கனவே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது என்பதும் இப்படம் தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.