தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
அதேசமயம் தனுஷ் தனது 50வது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். ஏற்கனவே கடந்த 2017இல் ப. பாண்டி திரைப்படத்தை இயற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் D50 படத்தில் தனுசுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துசாரா விஜயன், அனிகா சுரேந்திரன், செல்வ ராகவன் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமான் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் தயாராகி வரும் இதன் படப்பிடிப்புகள் சென்னையில் 500 வீடுகள் கொண்ட பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்புகள் கடந்த 85 நாட்களாக நடைபெற்று வருகிறது. தனுஷின் D50 படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.