spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகேப்டன் மில்லர் சிறப்பு காட்சிக்கு அனுமதி... தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த படக்குழு....

கேப்டன் மில்லர் சிறப்பு காட்சிக்கு அனுமதி… தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த படக்குழு….

-

- Advertisement -
தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், படக்குழுவினர் தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் தங்க மகன் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் தொடங்கிய இவரது துள்ளல் நடிப்பு இன்று வரை துள்ளிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படத்திலும் புதுமையான நடிப்பை வெளிக்கொண்டு வரும் நடிகர் தனுஷிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தமிழ் மட்டுமில்லை, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அவருக்கு பட்டி தொட்டி எங்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் கொடி நாட்டிய தனுஷ் பாலிவுட் பக்கம் திரும்பினார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த தனுஷ், அடுத்தடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

இது தவிர, ஹாலிவுட்டிலும் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். அதில்கடந்த ஆண்டு வெளியான தி கிரே மேன் படம் பெரியளவில் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து நடிப்பு மட்டுமன்றி தற்போது இயக்கத்திலும் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கேப்டன் மில்லர் . அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
we-r-hiring

இத்திரைப்படம் வரும் 12-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படக்குழு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியதற்கு நாங்கள் தமிழ்நாடு அரசிற்கு தாழ்மையுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

MUST READ