கேப்டன் மில்லர் படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்
- Advertisement -
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மேக்கிங் காணொலி வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் நடிகர் தனுஷ். தமிழ் மொழியில் உச்சம் தொட்ட தனுஷ் அடுத்து இந்தி, தெலுங்கு, மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்த பல ஆண்டுகளுக்கு வெளியாக உள்ள படங்களில் அவர் அடுத்தடுத்து முனைப்பு காட்டி நடித்து வருகிறார். நடிப்பு மட்டும் இல்லாமல் தற்போது இயக்கத்திலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார் நடிகர் தனுஷ். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் என இரண்டு படங்களை அவர் இயக்கி வருகிறார்.

இதனிடையே அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கேப்டன் மில்லர் . அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மேக்கிங் காணொலி இணையத்தில் வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. மேலும், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்