‘ஜெயிலர்’ படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் தனுஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நெல்சன் திலிப்குமார் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானவர். அதையடுத்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. பின்னர் விஜயை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார்.

தற்போது நெல்சன், ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். ஜெயிலர் படத்தில் மோகன்லால். சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷராப், தமன்னா, ரம்யா க்ரிஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தை அடுத்து நெல்சன் தனுஷ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அதற்கிடையில் விஜய் உடன் பீஸ்ட் படத்திற்காக நெல்சன் இணைந்தார். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதையடுத்து ‘கட்டாகுஸ்தி’ இயக்குனர் செல்லா அய்யாவு உடன் இணைய போவதாகவும் கூறப்படுகிறது.