spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅந்த ஃபீலிங் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.... 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' குறித்து...

அந்த ஃபீலிங் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்…. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ குறித்து வீடியோ வெளியிட்ட தனுஷ்!

-

- Advertisement -

நடிகர் தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் குறித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அந்த ஃபீலிங் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.... 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' குறித்து வீடியோ வெளியிட்ட தனுஷ்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் பெயர் பெற்று வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவர் பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி முதல் படத்திலேயே வெற்றி கண்டார். அடுத்தது ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்த தனுஷ் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் இயக்கியுள்ள திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.அந்த ஃபீலிங் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.... 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' குறித்து வீடியோ வெளியிட்ட தனுஷ்! ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். லியோன் பிரிட்டோ இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நாளை (பிப்ரவரி 21) திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் தனுஷ் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், “ராயன் படத்திற்கு பிறகு நான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தை நாங்கள் ஜாலியாக எடுத்திருக்கிறோம்.

we-r-hiring

அதை நினைக்கும் போது நீங்களும் இந்த படத்தை என்ஜாய் பண்ணுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் நடித்த இளைஞர்கள் அனைவரும் அவர்களின் எதிர்காலத்தை நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கனவு நிறைவேற வேண்டுமென்று நான் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். அந்த இடத்தில் நான் இருந்திருக்கிறேன். அந்த ஃபீலிங் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசியுள்ளார்.

MUST READ