Homeசெய்திகள்சினிமாமும்பை குப்பைமேட்டில் குபேரா படப்பிடிப்பு... 10 மணி நேர தீவிர படப்பிடிப்பில் தனுஷ்... மும்பை குப்பைமேட்டில் குபேரா படப்பிடிப்பு… 10 மணி நேர தீவிர படப்பிடிப்பில் தனுஷ்…
- Advertisement -
மும்பையில் குபேரா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள குப்பைமேட்டில் சுமார் 10 மணி நேரமாக நடிகர் தனுஷ் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

தமிழில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த தனுஷ் தற்போது தமிழ் திரையை தாண்டி பிற மொழிப்படங்களிலும் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு கட்டி பிசியாக நடித்து வருபவர் தனுஷ். இந்தியில், ராஞ்சனா மற்றும் ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ஹிட் அடித்தது. தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் இணைந்து மூன்றாவது படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தற்போது அவர் தெலுங்கில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். படத்தில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இப்படத்தின் குபேரா என்ற தலைப்புக்கு அண்மையில் சிக்கலும் ஏற்பட்டது. படத்தின் தலைப்புக்கு உரிமைகோரி, புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குபேரா படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள குப்பைமேடு ஒன்றில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. 10 மணி நேர படப்பிடிப்பில் இடைவௌி இல்லாமல், நடிகர் தனுஷ் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக எந்தவொரு முகக்கவசமும் இல்லாமல், குப்பைமேட்டில் படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.