spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅந்தப் பாடலை ஒரு ஜோக் மாதிரி தான் எடுத்தோம்.... 'கொலவெறி' பாடல் குறித்து தனுஷ்!

அந்தப் பாடலை ஒரு ஜோக் மாதிரி தான் எடுத்தோம்…. ‘கொலவெறி’ பாடல் குறித்து தனுஷ்!

-

- Advertisement -

நடிகர் தனுஷ் ‘கொலவெறி’ பாடல் குறித்து பேசியுள்ளார்.அந்தப் பாடலை ஒரு ஜோக் மாதிரி தான் எடுத்தோம்.... 'கொலவெறி' பாடல் குறித்து தனுஷ்!

கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோரின் நடிப்பில் ‘3’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ‘ஒய் திஸ் கொலவெறி’ எனும் பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். ஆங்கிலம் கலந்த தமிழ் வரிகளுடன் வெளியான இந்த பாடல் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இன்றுவரையிலும் இந்த பாடல் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் இடம்பெற்று இருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்தில் நடந்த பேட்டியில் கொலவெறி பாடலை உருவாக்கியது தொடர்பாக பேசியுள்ளார். அந்தப் பாடலை ஒரு ஜோக் மாதிரி தான் எடுத்தோம்.... 'கொலவெறி' பாடல் குறித்து தனுஷ்!அதன்படி அவர், “ஒய் திஸ் கொலவெறி பாடலை ஒரு ஜோக் மாதிரி தான் எடுத்தோம். முதலில் கொஞ்சம் வேலை செய்தோம். அப்புறம் அதை ஒதுக்கி வைத்து விட்டோம். பின்னர் அதை மறந்துவிட்டோம். ஒரு நாள் அதை மீண்டும் எடுத்த போது அது மிகவும் வேடிக்கையாக இருந்தது. வேடிக்கையானது தான் ஒர்க் அவுட் ஆகும் என்று நான் மியூசிசியனிடம் சொன்னேன். இந்த பாடலை வெளியிட்டால் தமிழ்நாட்டில் வெற்றி பெறும் என்று நினைத்தோம். ஆனால் பாடல் எதிர்பார்த்ததை விட வைரலானது. இது எனக்கு பெருமையாக இருக்கிறது. அதே சமயம் சவாலாகவும் இருக்கிறது. நான் இன்னும் அந்த பாடலை கடந்து போகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ