spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை'.... 'தாய் கிழவி' பாடலைப் போல் தயாராகும் புதிய பாடல்!

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’…. ‘தாய் கிழவி’ பாடலைப் போல் தயாராகும் புதிய பாடல்!

-

- Advertisement -

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தள்ளிப்போகும் தனுஷின் 'இட்லி கடை'.... புதிய ரிலீஸ் தேதி இதுதானா?

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படமானது தனுஷின் 52 வது படமாகும். ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் இந்த படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். கிரண் கௌசிக் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இவர்களுடன் இணைந்து அருண் விஜய், ராஜ்கிரண், சமுத்திரக்கனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படமானது 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் தேனி, பொள்ளாச்சி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை'.... 'தாய் கிழவி' பாடலைப் போல் தயாராகும் புதிய பாடல்!இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற தாய் கிழவி பாடலைப் போல் இட்லி கடை படத்திலும் கிராமத்து பின்னணியில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இந்த பாடல் காட்சி தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ