தனுஷ் நடிப்பில் உருவாகும் குபேரா படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே அவர் பவர் பாண்டி, ராயன் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட தனுஷ், அடுத்தது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இதற்கிடையில் இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. ஏறத்தாழ இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு திரையிடப்பட படக் குழுவினரால் திட்டமிடப்பட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.