தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து தனுஷ் தற்போது இயக்கி நடித்து வரும் திரைப்படம் தான் இட்லி கடை. தனுஷின் 52 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். கிரண் கௌசிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படம் ஆக்ஷன் கலந்த கிராமத்து கதை களத்தில் உருவாகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தேனி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடைபெற இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.