தனுஷ் 52 படத்தின் தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். அடுத்ததாக இவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 52வது திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரண் கௌஷிக் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கமிட் ஆகியுள்ளார். ஜிகே பிரசன்னா இதன் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் இதன் படப்பிடிப்புகளும் சமீபத்தில் தேனி பகுதியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியான தகவலின் படி இந்த படத்திற்கு இட்லி கடை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அடுத்தது இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்த அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அசோக் செல்வன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.