spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமிகவும் எதிர்பார்த்த தனுஷின் 'இட்லி கடை'.... ட்விட்டர் விமர்சனம் இதோ!

மிகவும் எதிர்பார்த்த தனுஷின் ‘இட்லி கடை’…. ட்விட்டர் விமர்சனம் இதோ!

-

- Advertisement -

தனுஷ் நடிப்பில் இன்று (அக்டோபர் 1) வெளியாகி உள்ள இட்லி கடை படத்தின் ட்விட்டர் விமர்சனம்.மிகவும் எதிர்பார்த்த தனுஷின் 'இட்லி கடை'.... ட்விட்டர் விமர்சனம் இதோ!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ், ‘பவர் பாண்டி’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடுத்தது இவர், தனது 52 ஆவது படமான இட்லி கடை படத்தை தானே இயக்கி, நடித்துள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். அருண் விஜய், ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், சமுத்திரக்கனி, பார்த்திபன், ஷாலினி பாண்டே ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றனர். அதேசமயம் இப்படம் தொடர்பான தங்களின் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

we-r-hiring

அந்த வகையில் ரசிகர் ஒருவர், “அருமையான எமோஷனல் பிணைப்புடன் வெளிவந்த உணர்வுப்பூர்வமான படம். தனுஷ் மீண்டும் வேற லெவல் என்பதை காட்டியுள்ளார். ஜி.வி. பிரகாஷின் இசையில் வெளிவந்த பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் ஆன்மாவாக திகழ்கிறது. எமோஷனல் காட்சிகள் ஸ்கோர் செய்கிறது. கன்றுக்குட்டி காட்சி மற்றும் இட்லி சுவைக்கும் காட்சி போன்றவை எமோஷனலின் உச்சத்தை எட்டியுள்ளது. இடைவேளை ரசிகர்களுக்கானது. அருண் விஜய் உடனான மோதல் தொடங்குகிறது. இரண்டாம் பாதியில் கதை எப்படி நகர்கிறது என்பதை பார்ப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றுமொரு ரசிகர், “முதல் பாதி உணர்வுப்பூர்வமானதாகவும், இரண்டாம் பாதி அதிரடியாகவும் இருக்கிறது. எளிமையான மற்றும் மெதுவான கதை. தனுஷ் தன்னுடைய அழகான காட்சிகளால் ரசிகர்களை கவர்கிறார். அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண் ஆகியோரின் கதாபாத்திரங்கள் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் சில தொய்வுகள் இருந்தாலும் அதன் பிறகு அது பிக்கப் ஆகிவிடுகிறது. ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் தனுஷ் வெற்றி பெறுகிறார். ஒட்டுமொத்தமாக ஒரு அழகான குடும்பப் பொழுதுபோக்கு படம். இது நிச்சயமாக பார்வையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும்” என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ