spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசெய்தியாளரிடம் மோதிய விஜய் பட தயாரிப்பாளர்

செய்தியாளரிடம் மோதிய விஜய் பட தயாரிப்பாளர்

-

- Advertisement -
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, படம் தொடர்பான வெளியீட்டு பிரச்சனை ஒன்றில் செய்தியாள்களிடம் மோதிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தெலுங்கு மொழியில் முக்கிய தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜூ. அவர் தெலுங்கு மொழி தயாரிப்பாளராக இருந்தாலும், கோலிவுட் திரையுலகிலும் அவர் பிரபலம் ஆனதற்கு முக்கிய காரணம் உண்டு. இவர், விஜய் நடித்த வாரிசு படத்தின் தயாரிப்பாளர் ஆவார். வம்சி இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வாரிசு திரைப்படம் வெளியானது. இதில் சரத்குமார், ஷ்யாம் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடத்திருந்தனர். படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார்.
வாரிசு படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த தில் ராஜூ, தமிழ்நாட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்று சர்ச்சையை கிளப்பிவிட்டார். அதனால், இன்று வரை விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கு மொழியில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படத்தை வௌியிடுவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், படத்தின் வெளியீடு தொடர்பான பிரச்சனை ஒன்றில், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ செய்தியாளர்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். அவரை அடிக்க முயன்ற காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ