- Advertisement -
தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக திரைக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவார். 3 திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி இவரை முன்னிறுத்தியது. இதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும், தங்களின் விவாகரத்தை அறிவித்தனர்.

இருவரும் பிரிவதாக அவரவர் சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் திரைப்படத்தை இயக்கினார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.




