spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீன்!

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீன்!

-

- Advertisement -

கடந்த மாதம் போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகா் கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீனை உயா்நீதிமன்றம் வழங்கியது.நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீன்!போதைப் பொருள் வழக்கில் கடந்த மாதம் 23 ஆம் தேதியன்று அதிமுக பிரமுகா் பிரசாத் அளித்த வாக்குமூலத்தின் படி 3 பிரிவுகளின் அடிப்படையில் நடிகா் ஸ்ரீகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டாா். பிரசாத் எனக்கு ரூபாய்.10 லட்சம் பணம் தர வேண்டும். அந்த பணத்தை கேட்டதற்கு கொகைன் என்ற போதைப் பொருளை கொடுத்து தமக்கு பழக்கம் ஏற்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்தாா். அவரைத் தொடா்ந்து நடிகா் கிருஷ்ணாவும் கடந்த மாதம் 26 ஆம் தேதியன்று போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், நடிகா் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகா் கிருஷ்ணா இது தொடா்பாக ஜாமீன் மனுவினை தாக்கல் செய்தனா். ஆனால் இந்த ஜாமீன் மனுவினை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், நடிகா் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகா் கிருஷ்ணா ஐகோட்டில் மனு தாக்கல் செய்தனா். இம்மனுவை விசாரித்த நீதிபதி போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகா் கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கினாா்.

we-r-hiring

மேலும் ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இருநபா் ஜாமீனிலும் விடுவிக்க உத்தரவு வழங்கினாா். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தாா்.

அன்புமணி தலைமையில் தியாகராய நகரில் போட்டி நிர்வாகக் குழு கூட்டம்

MUST READ