ஏ,பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கே உள்ளது என ராமதாஸ் கூறிய நிலையில் தியாகராயர் நகர் அலுவலகத்தில் அன்புமணி தலைமையில் பாமக நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகிறார்கள். இத்தகைய பரபரப்பான சூழலில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்பமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் பாமக வேட்பாளர்களை முடிவு செய்வதோடு ஏ,பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கே உள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளாா். வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி துவங்கிவிட்டதால், தேர்தலில் போட்டியிட உள்ளோர் விருப்ப மனு கொடுக்க ஆயுத்தமாகுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளாா்.
இந்நிலையில், தியாகராயர் நகர் அலுவலகத்தில் அன்புமணி தலைமையில் போட்டி நிர்வாகக் குழு நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடிவேல் ராவணன், திலக பாமா, எம்.எல்.ஏ.வெங்கடேஸ்வரன், வழக்கறிஞர் பாலு மற்றும் மயிலம் சிவக்குமார், சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏ,பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கே உள்ளது என ராமதாஸ் கூறிய நிலையில் கட்சியின் சட்ட விதிக்குழுவுடன் அவசர ஆலோனை கூட்டத்தை கூட்டியுள்ளாா்.
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்…