- Advertisement -

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக அருண் விஜய் வலம் வருகிறார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். 90களில் தொடங்கி அருண் விஜய் கிட்டத்தட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் முதன்முதலாக வில்லன் வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் நடிகர் அருண் விஜயின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது


இதை எடுத்து அவர் நடித்த தடம் திரைப்படம் விமர்சனம் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றத. இப்படத்தின் வெற்றி அருண் விஜய்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அளித்தது. தொடர்ந்து சினம் யானை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். யானை படத்தை அவரது மைத்துனர் ஹரி இயக்கியிருந்தார். இதனிடையே பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்



