spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் இயக்குனர் பாரதிராஜா

ஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் இயக்குனர் பாரதிராஜா

-

- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா. தற்போது படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுசுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்துள்ளார். இவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பாரதிராஜா அஜீரண கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து சென்னை, தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் உடல்நலம் தேறியதை அடுத்து மூன்று மாத இடைவெளிக்கு பிறகு “கருமேகங்கள் கலைகின்றன” படப்பிடிப்பில் இயக்குனர் பாரதிராஜா இணைந்துள்ளார்.

we-r-hiring

இயக்குனர் தங்கர் பச்சானின் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார், இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”. இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் பாரதிராஜா சிறிது நாட்களே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதன்பின் பிறகே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

MUST READ