- Advertisement -
டாடா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கவின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ஸ்டார். இத்திரைப்படத்தை பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்ற இளன் இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

யாரும் எதிர்பார்க்காத வகையில், ரசிகர்கள் இடையே ஏகபோக வரவேற்பு கிடைக்கிறது. நல்ல விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. வசூல் ரீதியாக சுமார் 15 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. படம் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில், கூடுதல் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞன் சினிமாவுக்குள் நுழைவதற்குள் படும் துன்பங்களை வௌிச்சம் போட்டு காட்டுகிறது ஸ்டார் திரைப்படம்.




