spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா"முடிந்தால்‌ நரகத்தில்‌ இருப்பவரையும்‌ சிரிக்க வை"... மனோபாலா மறைவுக்கு மிஷ்கின் இரங்கல்!

“முடிந்தால்‌ நரகத்தில்‌ இருப்பவரையும்‌ சிரிக்க வை”… மனோபாலா மறைவுக்கு மிஷ்கின் இரங்கல்!

-

- Advertisement -

நண்பர் மனோபாலா மறைவுக்கு இயக்கினார் மிஷ்கின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் மனோபாலா இன்று காலை காலமானார். அவரது மறைவு தமிழ் திரைத்துறையை மட்டுமல்ல தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

we-r-hiring

தமிழ் திரையுலகில் சுமார் 1000 படங்களுக்கு மேல்  நடித்து சாதனை படைத்தவர் மனோபாலா. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கவும் செய்துள்ளார். நடிகர் மட்டுமல்லாமல் நல்ல மனிதனும் கூட.

காமெடி கதாபாத்திரங்களில் மக்கள் மனதில் நிலைத்து நின்ற சில நடிகர்களில் மனோபாலா மிகவும் முக்கியமானவர்.

கல்லீரலில் பிரச்சனை சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். நடிகர் விஜய் உட்பட பல திரைத்துறை பிரபலங்கள் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களால் வாயிலாக தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

“அமைதி கொள்‌

இருள்‌ சூழ்ந்திருக்கும்‌ எந்த அறையிலும்‌ நீங்கள்‌
நுழையும் பொழுது, உங்கள்‌ கேலி கிண்டல்‌
நகைச்சுவையால்‌ அந்த அறை ஒளி பெறும்‌, எங்கள்‌
மனங்கள்‌ இதம்‌ பெறும்‌.

பாராட்டப்‌ பயப்படுகிற இந்த சினிமா உலகில்‌,

பாராட்டுவதையே வேலையாகக்‌ கொண்ட எங்கள்‌
மனோபாலாவே…

போய்‌ வா!

சொர்க்கத்தைச்‌ சந்தோஷப்படுத்து, முடிந்தால்‌
நரகத்தில்‌ இருப்பவரையும்‌ சிரிக்க வை.

அன்புடன்‌
மிஷ்கின்‌

MUST READ